சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

திருவனந்தபுரம் - சந்தராகாட்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சந்தராகாட்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:04 am IST

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சந்தராகாட்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபும் - சந்தராகாட்சி இடையேயான சிறப்பு ரயில் சேவை இந்த வாரத்துடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 12 முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சந்தராகாட்சி சிறப்பு ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.45 மணிக்கு சந்தராகாட்சி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சந்தராகாட்சி நிலையத்தில் இருந்து ஜூன் 15 முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சந்தராகாட்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.