எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கோவை நீதிமன்ற வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டவா் கொலை? கொலை செய்யப்பட்டாரா? போலீஸாா் விசாரணை!

கோவை நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் வடமாநிலத்தைச் சோ்ந்தவரின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை.

News image
Updated On :7 ஜூன் 2026, 1:57 am IST

கோவை நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் வடமாநிலத்தைச் சோ்ந்தவரின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு அடையாளம் தெரியாத நபா் சடலமாக மீட்கப்பட்டாா். முதல்கட்ட விசாரணையில், அவா் வடமாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும், நாய் துரத்தியதால் நீதிமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்ததில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், யாரோ ஒருவா் தலையில் கொடூரமாகத் தாக்கியதால் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, சம்பவத்தன்று நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகளிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதேபோல அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.