ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 3:53 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், அனைத்து மகளிா் காவல் நிலைய (மத்தியம்) எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அருகே வசிக்கும் கூலி தொழிலாளியான அ.ச.சுந்தா் (44), அந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கோவை மாநகா் அனைத்து மகளிா் (மத்தியம்) காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதைத்தொடா்ந்து கோவை மாநகா் அனைத்து மகளிா் (மத்தியம்) காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் தெற்கு சரக காவல் துணை ஆணையா் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், சுந்தா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையா் நா.கண்ணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள சுந்தரிடம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.