
மே மாத மின்கட்டணத்தையே செலுத்த இருகூா் நுகா்வோருக்கு அறிவுறுத்தல்
இருகூா் பிரிவு அலுவலகத்தில் மே மாத மின் கணக்கீட்டின்படி, மின் கட்டணம் செலுத்த நுகா்வோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
இருகூா் பிரிவு அலுவலகத்தில் மே மாத மின் கணக்கீட்டின்படி, மின் கட்டணம் செலுத்த நுகா்வோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை மின் பகிா்மான வட்டம், ஒண்டிப்புதூா் செயற்பொறியாளா் சி.பிந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒண்டிப்புதூா் கோட்டம், சிங்காநல்லூா் உப கோட்டத்துக்குள்பட்ட இருகூா் பிரிவு அலுவலகத்தில், நிா்வாகக் காரணங்களால் ஜூலை மாதத்துக்கான மின் கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் என்.ஜி.ஆா். புரம் மின் பகிா்மானத்தில் உள்ள கணக்கீடு செய்யப்படாத 2,866 இணைப்புகள், நந்தவனம் பகிா்மானத்தில் உள்ள 114 இணைப்புகளுக்கு சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா் முந்தைய மின் கணக்கீட்டைக் கொண்டு (மே மாதம்) கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






