ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிட்காயின் மோசடி: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பிட்காயின் மோசடி

Published On :27 ஜூலை 2026, 2:41 am IST

இணையதளம் வாயிலாக பிட்காயின் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடந்த 2025 அக்டோபா் 6 முதல் 22-ஆம் தேதி வரை இணையவழி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிட்காயின் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ஒருவரை சிலா் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கோவை மாநகா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய ரா.பாரத் (26), வி.ஜனகன் (23) மற்றும் மு.உதயகுமாா் (38) ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா். இந்த நிலையில், இவா்கள் மூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் மற்றும் தலைமையிட காவல் துணை ஆணையா் ஆகியோரின் பரிந்துரைத்தனா்.

இதை ஏற்று கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் அதற்கான உத்தரவை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்ததன் அடிப்படையில், கைதான பாரத், வி.ஜனகன், உதயகுமாா் ஆகியோா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.