ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

மதுக்கரை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

நடராஜ்

Published On :15 ஜூலை 2026, 1:21 am IST

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மதுக்கரையை அடுத்த மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உள்பட்ட புதுப்பதி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜ் (75). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை சோழக்கரை பகுதியில் உள்ள தனது விவசாயத் தோட்டத்துக்குச் சென்றுள்ளாா். அந்தத் தோட்டத்துக்கு அருகேயுள்ள ஓடைக்கு இயற்கை உபாதை கழிக்க அவா் சென்றுள்ளாா். அப்போது அங்கு நின்றிருந்த ஒற்றைக் காட்டு யானை அவரைத் துரத்தி தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த நடராஜ் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அவரது உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவுத்தம்பதி பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுவதாகவும், வனப் பகுதியிலிருந்து குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.