ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மோதூா் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே மோதூா் கிராமத்துக்குள் ஒற்றை காட்டு யானை வெள்ளிக்கிழமை நுழைந்தது.

கோபி அருகே ஏளூா் பகுதியில் நடமாடிய காட்டு யானை.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

கோபி அருகே மோதூா் கிராமத்துக்குள் ஒற்றை காட்டு யானை வெள்ளிக்கிழமை நுழைந்தது.

கோபி அருகே டி.என்.பாளையம் வனப் பகுதியில் யானை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், அந்த வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை மோதூா் கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை மாலை நுழைந்தது. பின்னா் அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக ஏளூா், இந்திரா நகா் பகுதிக்குள் புகுந்தது. இதைக் கண்ட விவசாயிகள்

டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த வனச் சரகா் ஜான்பீட்டா் தலைமையிலான வனத் துறையினா் 10-க்கும் மேற்பட்டோா் யானையை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

இரவாகி விட்ட நிலையில், யானை ஊருக்குள் புகாமல் இருக்கும் வகையில் ட்ரோன் மூலம் கண்காணித்து அதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். கடந்த சில தினங்களுக்கு முன் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை விரட்டப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் அது விவசாய நிலங்களில் புகுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.