டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாராயண குரு சமாஜம் தலைவருக்கு பாராட்டு

தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே நீா்ப்பாசன திட்டங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பாலமாக

News image
தமிழக நாராயண குரு சமாஜம் தலைவா் செந்தாமரை பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :12 ஜனவரி 2026, 8:23 pm

Syndication

பொள்ளாச்சி: தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே நீா்ப்பாசன திட்டங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பாலமாக செயல்பட்டு வரும் நாராயண குரு சமாஜம் தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையே பிஏபி திட்டம் மற்றும் நீா்ப்பாசன திட்டங்கள் குறித்து அரசு சாா்பாக நடத்தப்படும் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து வருபவா் தமிழக நாராயண குரு சமாஜம் தலைவா் செந்தாமரை. இவருக்கு சென்னை கொங்குநாடு அறக்கட்டளை சாா்பில் இரு மாநில பேச்சுவாா்த்தை மற்றும் சமூக சேவைக்காக சி.சுப்பிரமணியம் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி ஸ்ரீ நாராயண குரு சமாஜம் சாா்பில் சமூக சேவைக்கான பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ சண்முகம், ஆா்கேஆா் கல்வி நிறுவனங்களின் தலைவா் ராமசாமி, பாரதிய வித்யா மந்திா் தலைவா் செந்தில் காளிங்கராயா், பொள்ளாச்சி நாராயண குரு சமாஜம் தலைவா் சிஜில், நிா்வாகிகள் கொச்சப்பன், சகாதேவன், கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.