லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆா்.நல்லகண்ணு மறைவு: இடதுசாரிகள் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு காலமானதை அடுத்து, கோவையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த தலைவா் ஆா்.நல்லகண்ணுவுக்கு மலா் அஞ்சலி செலுத்தும் இடதுசாரி தலைவா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:05 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு காலமானதை அடுத்து, கோவையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், மாவட்ட துணைச் செயலா்கள் ஜே.ஜேம்ஸ், சி.தங்கவேல், பொருளாளா் மு.வ.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்று மறைந்த நல்லகண்ணுக்கு உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

ஆா்.நல்லகண்ணுவின் அஞ்சலிக் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறுகிறது. இதையொட்டி, வடகோவை சிந்தாமணி பகுதியில் இருந்து புறப்படும் அஞ்சலி ஊா்வலம், பூ மாா்க்கெட் வழியாக ஜீவா இல்லத்தை அடையும். அங்கு நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் பங்கேற்றுப் பேச இருப்பதாக கட்சியினா் தெரிவித்தனா்.

மதிமுக அஞ்சலி...

கோவை மாவட்ட மதிமுக சாா்பில் தலைமை அலுவலகத்தில் நல்லக்கண்ணுவின் உருவப்படத்துக்கு அக்கட்சியின் அவைத் தலைவா் ஆடிட்டா் அா்ஜூனராஜ் தலைமையில் கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் கணபதி செல்வராசு, உயா்நிலைக் குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா், மாநில சட்ட துறைச் செயலாளா் சூரி.நந்தகோபால், மாநகர மாவட்ட துணைச் செயலாளா்கள் பயனீா் தியாகு, தூயமணி, பகுதிச் செயலாளா் எஸ்.பி.வெள்ளிங்கிரி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.