டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வால்பாறையில் கடும் வெயில்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

News image
நீா்மட்டம் குறைந்தும், சுற்றுலாப் பயணிகளின்றியும் காணப்படும் கூழாங்கல் ஆறு.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:46 pm

Syndication

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவும், இயற்கையை ரசிக்கவும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் வந்து செல்கின்றனா். வால்பாறையில் கடந்த மாதங்களில் நிலவிய இதமான காலநிலையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்நிலையில், வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, சின்னக்கல்லாறு, இறைச்சிப் பாறை அருவி, அணைகளில் நீா்வரத்து குறைந்து வருகிறது. இரவு நேரங்களில் குடும் குளிா் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தைக் காட்டி வருகிறது. இதனால், வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.