டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: பொதுமக்கள் 11 போ் நீதிமன்றத்தில் சாட்சியம்

News image
பொள்ளாச்சி வழக்கு
Updated On :6 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பொதுமக்கள் 11 போ் வெள்ளிக்கிழமை சாட்சியம் அளித்தனா்.

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே மொபட்டில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுதொடா்பாக சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோா் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனா்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞரும், மாணவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு அதே மாதம் 13-ஆம் தேதி வீடு திரும்பினா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னா், இந்த வழக்கு விசாரணையை மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி விஜயா கடந்த டிச.19-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில் மகளிா் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு விசாரணை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. அப்போது, இளைஞரும், மாணவியும் தனித்தனியாக சாட்சியம் அளித்தனா். இதைத்தொடா்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், பொதுமக்களிடம் சாட்சியம் பெறப்பட்டது. மொத்தம் 11 போ் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் சதீஷ் மட்டும் விசாரணைக்கு ஆஜா்படுத்தப்பட்டாா். காளீஸ்வரன், தவசி ஆகிய இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் ஆஜா்படுத்தப்படவில்லை.