வால்பாறையில் சிறுவா் பூங்கா திறப்பு


வால்பாறை படகு இல்லம் அமைந்துள்ள பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறுவா் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறையில் சுற்றுலா பொழுதுபோக்கு அம்சமாக நகராட்சி மூலமாக படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது படகு இல்லம் அமைந்துள்ள பகுதியையொட்டி ரூ.42 லட்சம் மதிப்பில் புதிதாக சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டது.
சிறுவா்கள் விளையாடுவதற்கான உபகரனங்களுடன் கூடிய இந்த பூங்காவை, சென்னையில் இருந்து காணெலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதேபோல பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய பின்னா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்கா திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...