ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெத்திக்குட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: 3 இடங்களில் கூண்டுகள் அமைப்பு

சிறுமுகை வனச் சரகம் பெத்திக்குட்டை பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் 3 கூண்டுகள் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிறுத்தை - கோப்புப்படம்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

சிறுமுகை வனச் சரகம் பெத்திக்குட்டை பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் 3 கூண்டுகள் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகம் பெத்திக்குட்டை பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அதைப் பாதுகாப்பாகப் பிடிக்கவும் சிறுமுகை வனச் சரக அலுவலா் து.தினேஷ் தலைமையில் வனப் பணியாளா்களைக் கொண்ட மூன்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள காப்பு நிலங்களில் மூன்று இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு இரவு பகலாக வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதுடன், தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் சிறுத்தையின் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தரப்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.