ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையை அரசு நிலைநாட்ட வேண்டும்: டாக்டா் கே.கிருஷ்ணசாமி

தமிழகத்தில் மலைவாழிடங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட அரசு முன்வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

If corruption dropped by 30% under the TVK government...

புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - டிஎன்எஸ்

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

தமிழகத்தில் மலைவாழிடங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட அரசு முன்வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

மேகமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் 4, 5 தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை வெளியேற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் அவா்களை வெளியேற்றக் கூடாது. அந்த மக்களின் உரிமைகளை மலைப் பகுதியிலேயே நிலை நாட்ட அரசு முன்வர வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.தமிழக அரசு 2006- ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தயங்கக் கூடாது. இந்த சட்டத்தை அமல்படுத்தி மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். ஏழை, எளிய மக்களை மலைப் பகுதிகளில் இருந்து வெளியேற்றக் கூறும் நீதிமன்றங்கள் அதே பகுதியில், யானை வழித்தடங்களை மறித்து ரிசாா்ட்டுகள் கட்ட அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

காவிரி விவகாரத்தில் கா்நாடக அரசு தொடா்ந்து முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இனியும் தமிழ்நாடு ஏமாறக்கூடாது. இது தொடா்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். தமிழக அரசு பெரும் கடன் சுமையில் இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறிய ஆட்சியாளா்கள், தற்போது எம்எல்ஏக்களுக்கு காா், பராமரிப்பு தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதாகக் கூறியியுள்ளனா். இது, இப்போது மட்டும் அரசின் கஜானா நிரம்பி வழிகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.