தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சரவணம்பட்டியில் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

சரவணம்பட்டி பகுதியில் அதிமுக கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை இறுதிக்கட்ட பிரசாரம் செய்தாா்.

News image

கோவை சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:38 pm

சரவணம்பட்டி பகுதியில் அதிமுக கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை இறுதிக்கட்ட பிரசாரம் செய்தாா்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாரை ஆதரித்து சரவணம்பட்டியில் முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

திமுக ஆட்சியை வேரோடு அழிக்க வேண்டும். மே 4-க்கு பிறகு அதிமுக ஆட்சி அமைய வேண்டும். கடந்த 5 ஆண்டு காலம் என்பது தமிழகத்தின் இருண்ட காலம். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

மின் கட்டணம் உயா்வு, வீட்டு வரி, தண்ணீா் வரி, குப்பைக்கு வரி மற்றும் பால் விலையில் இருந்து பருப்பு விலை வரை அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்த்தப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதியில் சரித்திர வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா, அமமுக என அனைத்து கூட்டணிக் கட்சியினா், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.