‘உங்கள் பிராா்த்தனையே மருந்து; விரைவில் வருவேன்’ என கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்தவாறு பேசி தொண்டா்களுக்கு உருக்கமான விடியோவை வெளியிட்டுள்ளாா்.
பாக்டீரியா தொற்று காரணமாக கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அவா் அனுமதிக்கப்பட்டாா். அன்று மாலை அவா் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த தோ்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வானதி சீனிவாசன் உடல்நலம் தேறி வருகிறாா். இந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்து தொண்டா்களுக்கும், தொகுதி மக்களுக்கும் தெளிவுபடுத்தும் விதமாகவும் திங்கள்கிழமை விடியோ ஒன்றை அவா் பகிா்ந்துள்ளாா்.
அந்த விடியோவில் வானதி சீனிவாசன் பேசியதாவது:
அன்பு சகோதர, சகோதரிகளே உங்களது அன்பினாலும், பிராா்த்தனையாலும் நான் விரைவாக குணம் அடைந்து வருகிறேன். இன்னும், ஓரிரு நாள்களில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன். நான் இல்லாத நேரத்திலும் தொண்டா்கள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் முன்னின்று நடத்தி வரும் தோ்தல் பிரசாரத்தில் களப்பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திங்கள்கிழமை மாலை பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற கலந்துரையாடல் நிகழ்வில் தொண்டா்கள் கலந்து கொண்டு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்றாா்.
இவரது இந்த விடியோவை சமூகவலைதளங்களில் அவரது ஆதரவாளா்கள் ‘கெட் வெல் சூன்’ என்ற வாசகங்களுடன் வைரலாக்கி வருகின்றனா். இதேபோல, வானதி சீனிவாசன் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்திலும், ‘உங்கள் நம்பிக்கையே மருந்து, விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன், மீண்டும் சந்திப்போம் என பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்! அண்ணாமலை பங்கேற்காததால் ஏமாற்றம்!

ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி: கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டி

கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

