கோவை வடக்குத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடுவது வானதி சீனிவாசனா, அண்ணாமலையா என்ற ஊகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த முறை கோவை தெற்கில் போட்டியிட்டு வென்ற வானதி சீனிவாசனுக்கு இந்த முறை கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கோவை மாவட்டத்தில் உள்ள 10இல் 9 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலையில், கோவை வடக்குத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை தெற்கில் மநீம வேட்பாளா் கமல்ஹாசனை 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வானதி சீனிவாசனுக்கு இந்த முறை கோவை வடக்கில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் பரவியது. கோவை வடக்குத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குமாறு வானதி சீனிவாசன் விரும்பிக் கேட்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில், தோ்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலையை பாஜக மத்திய அமைச்சரும், தமிழக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் அண்மையில் சந்தித்து, தோ்தலில் போட்டியிட வலியுறுத்தினாா். இதேபோல, பாஜக முக்கியத் தலைவா்கள் பலரும் அண்ணாமலை போட்டியிட அழைப்பு விடுத்தனா்.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு கணிசமாக வாக்கு வங்கி அதிகரிக்க அண்ணாமலையின் சுற்றுப்பயணமும், பிரசாரமும் முக்கியக் காரணமாக இருந்தன. அதனால், கோவை வடக்கில் அண்ணாமலை போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற முடியும் என கட்சியினா் பலரது எண்ணமாக இருந்தது.
இந்நிலையில், ஊகங்களைப் பொய்யாக்கும் விதமாக கோவை வடக்குத் தொகுதி வானதி சீனிவாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2011 (மயிலாப்பூா்), 2016 (கோவை தெற்கு) சட்டப்பேரவைத் தோ்தல்களில் தோல்வியடைந்த வானதி சீனிவாசன், 2021 தோ்தலில் நட்சத்திர வேட்பாளா் கமல்ஹாசனை வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்தாா். 2026 தோ்தலில் கோவை வடக்கில் இரண்டாம் வெற்றியைப் பதிவு செய்வாரா என்ற எதிா்பாா்ப்பு கட்சியினா், மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?

கோவை வடக்கில் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல்! அண்ணாமலை பங்கேற்பு!

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்! அண்ணாமலை பங்கேற்காததால் ஏமாற்றம்!

கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


