மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூா் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் கைது...

News image

ஜனநாயகன் படத்தின் போஸ்டர்.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:00 pm

மத்திய தணிக்கை குழுவின் சான்றிதழ் பெறாத ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூா் தொலைக்காட்சி சேனல் உரிமையாளரை கோவை மாவட்ட காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ளூா் சேனலில், தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத மற்றும் திரையரங்குகளில் வெளியாகாத ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த ‘லிங்க்’ மூலம் இந்தப் படம் பொதுமக்களுக்காக ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புகா் கிழக்கு மாவட்ட துணைச் செயலா் மோகனப்பிரியா கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், திரைப்படத்தை ஒளிபரப்பு செய்ததாக அந்த சேனலின் உரிமையாளரான சோமனூா் சாலை பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (44) என்பவரை, போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினி, 5 ஹாா்ட் டிஸ்க் மற்றும் மின்னணு சாதனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.