கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர், வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
கிணத்துக்கடவை அடுத்த நல்லட்டிபாளையம் பகுதியில் திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நாகேஸ்வரி என்பவரது வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றுள்ளனர். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்து, "நாங்கள் வசிக்கும் வீடு வாடகை வீடு, ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்கு சேகரிக்க வந்த நபர்கள், நாகேஸ்வரியையும், அவரது கணவர் பிரதீப்பையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் அளித்துள்ளார். காயமடைந்த அவர் கிணத்துக்கடவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் அந்தப் பெண் தான் கைக்குழந்தையுடன் இருந்தபோது தாக்கியதாகத் தெரிவிக்கும் அவரது விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரூரில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் பிரசாரம் நிறைவு

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா. ராஜேந்திரன் பிரசாரம்
அருமனை சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்த எஸ்.விஜய்தரணி

பா்கூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


