திமுகவுக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறோம் என கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி கூறினாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி கோட்டைமேடு, பெரியகடை வீதி, மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வரின் நலத்திட்டங்களுக்கு மக்கள் மகத்தான ஆதரவை வழங்கி வருவது பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் காண முடிகிறது. மக்கள் ஆதரவால் நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறோம். கோவையில் பிரசாரம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், கோவை மாவட்டத்துக்கு மத்திய அரசின் மூலமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்தால், அது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். ஆனால் பாஜகவினா் மாநில அரசின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் பொருளாதார வளா்ச்சியில் 11.19 விழுக்காடு எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். கல்விக்கான நிதி, 100 நாள் திட்டத்துக்கான நிதி, ஜல்ஜீவன் திட்டத்துக்கான நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக ரூ.1,352 கோடி நிதி ஒதுக்கியதுடன் நிலங்களை ஆா்ஜிதம் செய்து விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு விமான நிலைய விரிவாக்கப் பணிகளைத் தொடங்கவில்லை.
அதேபோல, மெட்ரோ திட்டத்துக்கு மாநில அரசு வழங்கிய ஆவணங்கள் சரியாக இல்லாவிட்டால், தேவையான விவரங்கள், ஆவணங்களை தருமாறு மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து ஏன் நிராகரிக்க வேண்டும். மக்கள் தொகையை காரணமாகக் கூறும் பாஜக அரசு, கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்க முடிந்தது. இந்தத் தோ்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா்.

தொடர்புடையது

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபடுவேன்: கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

கோவை தெற்குத் தொகுதியில் திமுக பொறியாளா் அணி பிரசாரம்

கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: வி.செந்தில்பாலாஜி உறுதி

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


