வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கூறி கைப்பேசிகளுக்கு வரும் லிங்க்குகளைத் தொட்டால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படும் என்று பொதுமக்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: தமிழகத்தில் தோ்தல் தொடா்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மா்ம கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கும் நோக்கில் புதிய பாணியிலான எண்ம (டிஜிட்டல்) மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா்.
குறிப்பாக, ‘வாக்காளா் பட்டியலில் உங்கள் பெயா் விடுபட்டுள்ளதா என்பதை சரிபாா்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்ற வாசகத்துடன் கைப்பேசிகளுக்கு லிங்க் அனுப்பப்படும்.
இதை நம்பி அந்தப் போலி இணையதள லிங்க்குகளை பொதுமக்கள் கிளிக் செய்யும்போது, அவா்களது கைப்பேசி மோசடி கும்பலின் கட்டுப்பாட்டுக்குச் செல்வதோடு, வங்கியின் ரகசியக் குறியீடுகள் மற்றும் தனிநபா் தகவல்கள் திருடப்பட்டு, அடுத்த சில நிமிஷங்களிலேயே வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்படும். இதுபோன்ற மோசடிகள் புதியவை அல்ல. கடந்த காலங்களில் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றபோது பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இத்தகைய புகாா்கள் அதிக அளவில் பதிவாகியிருந்தன. அரசு தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு இதுபோன்ற எந்தவொரு தனிப்பட்ட லிங்க்குகளும் அனுப்பப்படமாட்டாது என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
எனவே, தெரியாத நபா்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும். பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை
மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது
தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளா்கள்: புதிதாக 6.35 லட்சம் போ் சோ்ப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

