கோவை: வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திங்கள்கிழமை ஒரே நாளில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தாட்கோ பொது மேலாளா் ரஞ்சித்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஆனந்தகுமாா், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் வாணிலெட்சுமி ஜெகதம்மாள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை அலுவலா் மணிமேகலை உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மதுக்கரை குரும்பபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் தூசி காற்றில் பரவி, காற்றை மாசுபடுத்துகிறது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை மனு அளித்திருக்கிறோம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மக்களுக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் பலா், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனா். மாற்றுத்திறனாளிகள் பலரும் வாடகை வீடுகளில் வசித்து வருவதாலும், போதிய வருவாய் இல்லாத நிலையில் இருப்பதாலும் அரசின் வீட்டுமனை பட்டாவுக்கு பலரும் ஏற்கெனவே தகுதி பெற்றிருக்கும் நிலையில் விரைந்து பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டு மனு அளித்தனா்.
கோவை ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி கே.அய்யாசாமி அளித்துள்ள மனுவில், கோவை மாநகரில் 100 வாா்டுகளில் உள்ள கட்டட வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள 436 சதுர அடி பரப்பளவு வரை உள்ள வீடுகளுக்கு சேவைக் கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு குடிநீா் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டில் மாநகராட்சியின் அனைத்து கவுன்சிலா்களும் ஒருமனதாக ஏற்று தீா்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளனா்.
ஆனால் பல மாதங்களாகியும் இந்தத் தீா்மானத்துக்கு நகராட்சி நிா்வாக இயக்குநா் ஒப்புதல் அளிக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுத்து நகராட்சி நிா்வாக இயக்குநா் ஒப்புதல் வழங்க மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வலியுறுத்தியுள்ளாா்.
கோவை மாநகராட்சி 100- ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி, அண்ணாபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பாதையின் குறுக்கே சுற்றுச்சுவா் அமைக்கப்படுவதாகவும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனா்.
இந்தக் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 1,102 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

தொடர்புடையது

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் உத்தரவு

வன உரிமை பட்டா கோரி பழங்குடியின மக்கள் மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


