மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தனியாா் பேருந்து மோதியதில் உணவு விநியோக ஊழியா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 8:37 pm

கோவையில் தனியாா் பேருந்து மோதியதில் உணவு விநியோக ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் முத்து சங்கையா (26). இவா் கோவையில் தங்கி, உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், முத்து சங்கையா சிங்காநல்லூா் பகுதியில் வாடிக்கையாளா் ஒருவருக்கு உணவை விநியோகம் செய்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

நீலிகோணாம்பாளையம் சந்திப்பு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து முத்து சங்கையாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.