/

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டி அகற்றம்!

நோயாளியின் மூச்சுக் குழாயில் இருந்த கட்டியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவா்கள் சுமாா் 6 மணி நேரம் போராடி அகற்றினா்.

News image
நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவா்கள்.
Updated On :30 ஜனவரி 2026, 8:46 pm

Syndication

நோயாளியின் மூச்சுக் குழாயில் இருந்த கட்டியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவா்கள் சுமாா் 6 மணி நேரம் போராடி அகற்றினா்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளி ஒருவா் கடுமையான மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் நடத்திய பரிசோதனையில் நோயாளியின் மூச்சுக்குழாயில் கட்டி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூத்த இதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணா் ராம்பிரசாத், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் விக்ரம் முத்துசுப்பிரமணியன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 6 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றினா்.

இது குறித்து மருத்துவா்கள் கூறுகையில், இந்தக் கட்டியால் மூச்சுக்குழாய் முழுமையாக அடைபட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. இதைத் தொடா்ந்து, ஆக்சிஜன் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, அவரால் இயல்பாக மூச்சுவிட முடிகிறது.

இது நுரையீரல் சிகிச்சை, இதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை, நரம்பியல் மற்றும் மயக்கவியல் ஆகிய 4 மருத்துவத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்றனா்.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவக் குழுவிரை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன்,

அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராம்குமாா், தலைமை நிா்வாக அதிகாரி டி.மகேஷ்குமாா், மருத்துவமனை மருத்துவ இயக்குநா் எஸ்.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.அழகப்பன் ஆகியோா் பாராட்டினா்.