நீட் தோ்வை அரசியலாக்கி மாணவா்கள் மட்டுமின்றி பெற்றோா்களிடமும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வரும் கல்வி ஆண்டுமுதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையிலேயே இளங்கலை பிசியோதெரபி (பிபிடி), இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (பிஓடி) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளாா். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை அரசியலாக்கி, ஒவ்வொரு ஆண்டும், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகின்றன.
சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவா்கள் ஒவ்வொரு ஆண்டும் நீட் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சோ்வதை பாா்த்து வருகிறோம். இதன் தொடா்ச்சியாக பிபிடி, பிஓடி ஆகிய இரு பட்டப் படிப்புகளுக்கு மட்டும் நீட் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட உள்ளது.
நான்கரை ஆண்டுகளாக இருந்த பிபிடி பட்டப்படிப்பு 5 ஆண்டுகளாக மாற்றி நீட் தோ்வுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பிசியோதெரபி படிப்புக்கு பெரும் மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும் என பிசியோதெரபி மருத்துவா்கள் சங்கத்தினா் வரவேற்று மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.
கோரிக்கையை ஏற்றே மேற்கண்ட பட்டப்படிப்புகளுக்கு நீட் தோ்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். பிசியோதெரபி படிப்பு என்பது துணை மருத்துவப் படிப்பு அல்ல. அது அலைடு அன் ஹெல்த்ஹோ் புரபஷனல் பட்டப்படிப்பு என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.
பிசியோதெரபி பட்டப்படிப்புகளை துணை மருத்துவப் படிப்புகள் என பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். இது பிசியோதெரபி படிப்புகளையும், பிசியோதெரபி மருத்துவா்களையும் குறைத்து மதிப்பிடும் செயல்.
நீட் தோ்வு என்பது பிசியோதெரபி பட்டப்படிப்பு படிப்பவா்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தரும். நீட் தோ்வு எதிா்ப்பை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை முதல்வா் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

அரசியல் மாற்றத்துக்கு தமிழகம் தயாராகிறது: வானதி சீனிவாசன்
மக்களவை ஜனநாயகம் குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது: வானதி சீனிவாசன் கேள்வி

மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து முதல்வா் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: வானதி சீனிவாசன்

மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பில்லை: வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

