டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொலை வழக்கில் சிறுவனுக்கு தண்டனை

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் ஓராண்டு இருக்க வேண்டுமென தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூா் கங்கா நகா் பகுதியில் உள்ள சாய ஆலையில் ஒடிசாவை சோ்ந்த அணில்குமாா் ஜெனா (18), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோா் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனா். இந்நிலையில் கடந்த 2025 அக்டோபா் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்துள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிறுவன் கோபமடைந்து கட்டையால் தாக்கியதில் அணில்குமாா் ஜெனா உயிரிழந்தாா்.

இது துகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்து கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் இளம்சிறாா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

கொலை குற்றத்துக்காக செங்கல்பட்டு அரசினா் சிறப்பு இல்லத்தில் சிறுவன் ஓராண்டு இருக்க வேண்டும் என தண்டனை விதித்து நீதிக்குழும நடுவா் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினா்கள் முருகேசன், மல்லிகா ஆகியோா் உத்தரவிட்டனா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.