அத் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட 14 பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு உட்பட்ட சாய ஆலைகள் இயங்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் இசைவாணை வழங்கியது. தவிர, நீதிமன்றம் விதித்த உத்தரவின்படி ஜன. 6-க்குள் பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை முடிக்காமலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை முழுமையாக செலுத்தாத வகையிலும் இருந்த 100 சாய ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கெயாண்டு மின்இணைப்பை துண்டித்தது. அதன்பின்னர், இப் பணிகளைச் செய்த 26 ஆலைகளின் மீதான நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது.