/

காங்கிரஸôர் மறந்த தேசிய தலைவர்!

சேலம், ஏப். 24: காங்கிரûஸ தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அகில இந்திய  காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தவரும், தேசியவாதியுமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் நினைவு நாளன்று (ஏப்.19) அவரது சிலைக்கு மாலை அணிவி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:38 pm

க. தங்கராஜா

சேலம், ஏப். 24: காங்கிரûஸ தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அகில இந்திய  காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தவரும், தேசியவாதியுமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் நினைவு நாளன்று (ஏப்.19) அவரது சிலைக்கு மாலை அணிவிக்கவும், சிலையை சுத்தம் செய்யவும் யாரும் முன் வராதது தேசியவாதிகளை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 மதுராந்தகம் அருகேயுள்ள பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் 1852  ஜூன் 18-ம் தேதி சடகோபாசாரியாருக்கும், கனகவள்ளி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் விஜயராகவாச்சாரியார். பச்சையப்பன் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்ற இவர் 1875-ல் பட்டம் பெற்ற பிறகு சென்னை, மங்களூர், சேலத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் வழக்கறிஞர் பட்டம் பெற்று 1881-ல் சேலத்தில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.

 சேலம் நகராட்சிக் கவுன்சில் உறுப்பினராக 1882-ல் தேர்வு செய்யப்பட்ட இவர், 1895-ல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு 6 ஆண்டுகள் பதவி வகித்தார். காங்கிரûஸ நிறுவிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம் உடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர். டிசம்பர் 1885-ல் காங்கிரஸ் மகாசபை தோற்றுவிக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ்

முதல் தமிழின தலைவர்

 இதில் பங்கேற்ற ஆலன் ஆக்டேவியன் ஹியூம், தாதாபாய் நெüரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான 72 உறுப்பினர்களில் விஜயராகவாச்சாரியாரும் ஒருவர்.  திலகருடன் இணைந்து இவர் தீவிரமாகப் பணியாற்றினார்.

 1913-ல் மத்திய சட்டசபை உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட இவர், கோபாலகிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட பெரும் தலைவர்களுடன் பணியாற்றினார். 1920-ல் காங்கிரஸ் கட்சியின் 38-வது அகில இந்தியத் தலைவராக நாகபுரி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.   

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முதல் தமிழ் தலைவரான பெருமை இவரையே சேரும். இந்த கூட்டத்தில்தான் காந்திஜியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 1932-ல் அலகாபாதில் நடைபெற்ற காங்கிரஸ் ஒற்றுமை மாநாட்டுக்கும் இவரே தலைமை வகித்தார்.

கட்சியின் பிரிவுகள் குறித்து கவலைப்பட்டு பேசிய இவரது உரை அனைவரது உள்ளங்களையும் உருக வைத்து காங்கிரஸில் ஒற்றுமைக்கு வழிவகுத்தது என்பது வரலாறு.

 தேச விடுதலை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றுக்காக 60 ஆண்டுகள் போராடிய இந்த தேசியத் தலைவர் இந்து மகா சபையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தேசிய வரலாற்றில் பல்வேறு பெருமைகளைப் பெற்ற இவர் 1944 ஏப்ரல் 19-ல் மறைந்தார்.

நூலகம்:  இவரது நினைவாக விஜயராகவாச்சாரியார் பெயரில் சேலத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் நூலகம் அமைக்கப்பட்டு, சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை 1982-ல் அப்போதைய நிதி அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.

ஏணிப்படி இல்லா சிலை:  இதேபோல் சேலம் 2-வது அக்ரஹாரத்தில் அரசு சார்பில் விஜயராகவாச்சாரியாருக்கு 30.7.84 அன்று சிலை நிறுவப்பட்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். சுமார் 7 அடி உயர பீடத்தின் மீது ஆள் உயர சிலை நிறுவப்பட்டது. ஆனால் அப்போது அந்தச் சிலைக்கு ஏணிப்படி அமைக்கப்படவில்லை.

 அன்று முதல் இன்று வரை இந்தச் சிலையை யாரும் கண்டு கொள்வதும் இல்லை. அவரது பிறந்த நாளின் போதும், நினைவு நாளன்றும் இப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் தான் மாலை வாங்கிப் போட்டு வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மதச்சார்பற்ற ஜனதா தள மாவட்டத் தலைவரான ஜி.வேலாயுதம் தலைமையில் அக்கட்சியினர் சிலர் மட்டுமே ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து வேலாயுதம் கூறியது: ஒதுக்குப் புறத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் விஜயராகவாச்சாரியார் சிலைக்கு ஏணிப்படி, மின் விளக்கு வசதி அமைக்க வேண்டும் என்று தேசியவாதிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வகித்து வரும் இந்தச் சிலையை பிறந்த நாள், நினைவு நாளன்று கழுவி ஒரு மாலை அணிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினருக்குக் கூட தோன்றவில்லைமாலை அணிவிக்க ஏணி இல்லாததால் ஆண்டுதோறும் அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் யாராவது குனிந்து கொள்ள, அவர் மீது ஏறித்தான் மாலை அணிவித்து வருகிறோம்.

 நாட்டுக்காக உழைத்த ஒரு தேசியத் தலைவரான, சேலத்தின் பெருமை மிகுந்த மனிதரான இவரை, அரசுதான் கைவிட்டு விட்டது என்றால் அவர் சார்ந்திருந்த கட்சியும் கூட கை கழுவி விட்டது வருந்தத்தக்கது என்றார்.

தேசிய தலைவரை அவமதிக்கலாமா?

 கடந்த 19-ம் தேதி இவரது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் ஜனதாதளம் சார்பில் மட்டும் ஒரேயொரு மாலை, அதுவும் போராடி மேலே ஏறி அணிவிக்கப்பட்டது. சிலையை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ஏனோ நிராகரிக்கப்பட்டுவிட்டது.

 சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை பெருமைப்படுத்த முடியாவிட்டாலும் இது போன்ற சிலைகளை நிறுவி அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடும் சிறுமைப்படுத்தும் செயல்களையாவது செய்யாமல் இருக்கலாமே என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.