ஆண்டுக்கு ரூ.450 கோடி இழப்பு: வெளி மார்க்கெட்டில் டன் ரூ.1,500 வரை எளிதில் விலை போகும் சாம்பல், சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.250-க்கே விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ.1.25 கோடி வரை மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. நஷ்டத்தில் இயங்குவதால் மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக கூறி வரும் மின் வாரியம், வெளி மாநிலங்களில் மின்சாரத்தை விலைக்கு வாங்கும் ஒப்பந்தத்தையே அடிக்கடி மாற்றி அமைக்கிறது. ஆனால் ஆண்டுக்கு சுமார் ரூ.450 கோடி வருவாயை தெரிந்தே இழக்க காரணமாக இருக்கும் இந்த பழைய ஒப்பந்தத்தை ஏன் மாற்றி அமைக்கக் கூடாது என்ற கேள்வியையும் செங்கல் தயாரிப்பாளர்கள் எழுப்புகின்றனர்.