திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு தொடரும் நெல் கடத்தல்

ஈரோடு, செப். 26:   கொள்முதல் விலையை கேரள அரசு உயர்த்தியுள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் இருந்து அம் மாநிலத்திற்கு பெருமளவில் நெல் கடத்தப்படுகிறது.   தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மோட

Updated On :20 செப்டம்பர் 2012, 6:08 pm

ஈரோடு, செப். 26:   கொள்முதல் விலையை கேரள அரசு உயர்த்தியுள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் இருந்து அம் மாநிலத்திற்கு பெருமளவில் நெல் கடத்தப்படுகிறது.

  தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மோட்டா ரகத்துக்கு (குண்டு ரகம்) கிலோ ஒன்றுக்கு ரூ.10, சன்ன ரகத்துக்கு ரூ.10.50-ம் வழங்கப்படுகிறது. இந்த விலை கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான விலை குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

  தற்போது கேரள அரசு நெல் கொள்முதல் விலையை கடந்த வாரத்தில் உயர்த்தியுள்ளது. இதன்படி அங்கு மோட்டா ரகத்துக்கு ரூ.12, சன்ன ரகத்துக்கு ரூ.13-ம் என வழங்கப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழக எல்லைப் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் நெல் கடத்தப்படுகிறது.

  நெல்லுக்கான "லெவி' நீக்கப்பட்ட பிறகு விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்கியதற்கான சான்று இருந்தால் போதும், எந்த மாநிலத்துக்கும் வேண்டுமானாலும் தடையின்றி நெல் எடுத்துச்செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் நெல் கடத்தப்படுகிறது.

  ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை, கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் முதல்போக அறுவடை தற்போது முடிவடைந்துள்ளது.

  தமிழக அரசு மோட்டா ரகத்துக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 மட்டுமே வழங்குவதால், நெல் வியாபாரிகள் இப்பகுதி விவசாயிகளிடம் கிலோ ரூ.11-க்கு நெல்லை வாங்கி, கேரளத்தில் ரூ.12-க்கு விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் ஒரு லோடு நெல்லுக்கு ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

  தற்போது இப்பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏறத்தாழ 20 லோடு நெல் கேரளத்துக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

  இதுகுறித்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க செயலர் தளபதி கூறியது:

  பாசன வாய்க்கால் மூலம் ஏறத்தாழ 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில் தற்போது சுமார் 21 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இம்மாத முதல் வாரத்திலேயே அறுவடைப் பணிகள் தொடங்கிவிட்டன.

  தமிழக அரசு பொதுவாக காவிரி டெல்டாவில் அறுவடை நடைபெறும் காலத்தைக் கணக்கில் கொண்டே நெல் கொள்முதல் விலை உயர்வை அறிவிக்கிறது. இந்த நேரத்தில் ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகள் ஒரு போக அறுவடையை முடித்துவிடுகின்றனர்.

  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நெல் கொள்முதல் விலை உயர்வு குறித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நடப்பு ஆண்டுக்கு மோட்டா ரகத்துக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.13, சன்ன ரகத்துக்கு ரூ.15 என்றும் வழங்க வேண்டும் என்றார்.

  இதுகுறித்து வேளாண்மைத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

  கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே தற்போது நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்குள் விலை உயர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

  நெல் சாகுபடியில் ஜாம்பவான்களாக கருதப்படும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கூட, அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்து விட்டன. உணவுத்தேவை அதிகரித்துள்ள போதிலும், விளைச்சல் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

  தற்போதைய அரிசி தேவைக்கு ஆந்திர மாநிலத்தை நம்பியுள்ளது தமிழக அரசு. இதுபோன்று தொடர்ந்து அண்டை மாநிலங்களுக்கு நெல் கடத்தப்படும்பட்சத்தில் துவரம் பருப்பு போன்று விரைவில் பொன்னி அரிசி விலையும் ரூ.100-ஐ எட்டிவிடும்.

  தமிழகத்தில் விளையும் நெல்லை முழுமையாக தக்கவைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் இத்தகைய சவாலை சந்திக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.