எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சைலாத் சிலம்பம்: பாதுகாப்பது அவசியம்!

ஈரோடு, அக்.22:  தற்காப்பு கலையான சைலாத் சிலம்ப விளையாட்டுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டுமென இந்த கலையை கற்றுக்கொள்வோர் எதிர்பார்க்கின்றனர்.   சிலம்பாட்டத்துக்கு முந்தைய நிலையாக கருதப்படுவது சைலாத் ச

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:02 pm

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு, அக்.22:  தற்காப்பு கலையான சைலாத் சிலம்ப விளையாட்டுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டுமென இந்த கலையை கற்றுக்கொள்வோர் எதிர்பார்க்கின்றனர்.

  சிலம்பாட்டத்துக்கு முந்தைய நிலையாக கருதப்படுவது சைலாத் சிலம்பம். சைகையால் உலாத்துதல் என்பது இதற்கு பொருள். சிலம்ப விளையாட்டில் எதிரிகளை தாக்கும் யுக்திகள் முதன்மையானதாக இருக்கும். எதிரிகளிடமிருந்து பாதுகாத்து கொள்ளுதல், தடுப்பு முறைகள் குறித்த யுக்திகள் மட்டுமே சைலாத் சிலம்பப் போட்டியில் இடம்பெறும்.

  தமிழகத்தின் குக்கிராமங்களில் இந்த விளையாட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்த விளையாட்டில் சிலம்ப விளையாட்டின் சாயல் தெரிவதால், இதனையும் சிலம்ப விளையாட்டு என்றே கிராம மக்கள் கருதுகின்றனர். கிராமப்புற மக்களின் பழமையான தற்காப்புக் கலையான சைலாத் சிலம்ப விளையாட்டினை, அனைத்து நிலைகளிலும் கொண்டு செல்லும் முயற்சி கடந்த 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

  தமிழக சைலாத் சிலம்பச் சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் இந்த விளையாட்டினை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். இந்த விளையாட்டினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தனியாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

  இந்த விளையாட்டுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் பாடத்தில் இந்த விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கடந்த 2008-ம் ஆண்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து சைலாத் சிலம்ப சங்க மாநிலச் செயலர் குமரி கணேசன் கூறியது:

  டென்னிஸிலிருந்து டேபிள் டென்னிஸ், கைப்பந்திலிருந்து எறிபந்து போன்ற விளையாட்டுகள் புதிதாக உருவானபோது அந்த விளையாட்டுகளை ஏற்றுக்கொண்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த வரிசையில் தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சைலாத் சிலம்ப விளையாட்டுக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏறத்தாழ 5000 இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த விளையாட்டினை கற்றுவருகின்றனர். மேலும் மூச்சுத்திணறல், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு இந்த விளையாட்டு மூலம் தீர்வு கிடைக்கிறது என்று சித்த மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.

  இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மண்டல மேலாளர் எ.தியோடரிடம் கேட்டபோது, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கு பதிவு செய்யப்படும் எந்த ஒரு விளையாட்டும் அரசு அங்கீரம் பெற்றதாக கருதப்படும். இந்த பட்டியலில் உள்ள விளையாட்டுகளுக்கு மட்டுமே அரசு உதவி அளிக்கும். பொதுவாக ஒரு விளையாட்டை தழுவி, புதிய விளையாட்டு உருவாக்கப்படும்போது தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். விதிமுறைகளின் அடிப்படையில்தான், தமிழக ஒலிம்பிக் சங்கம் புதிய விளையாட்டினை ஏற்றுக்கொள்கிறது என்றார்.

  தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கு உரிய காலத்தில் தமிழக அரசு அங்கீகாரம் அளிக்காததால், இந்த விளையாட்டினை மகாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது. இதுபோன்ற நிலை சைலாத் சிலம்ப விளையாட்டுக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு. விளையாட்டுகளால் சமூக மற்றும் கலாச்சார உறவு மேம்படுமே தவிர, பாதிப்பை ஏற்படுத்தாது.

  தமிழர்களின் தற்காப்பு கலையான சைலாத் சிலம்ப கலை அழிந்துவிடாமல் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்காப்புக் கலை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.