எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கரும்பு விவசாயிகளுக்கு அதிகவிலை வழங்கியது திமுக அரசுதான்

 சேலம், அக். 1: கரும்பு விவசாயிகளுக்கு அதிக கொள்முதல் விலை வழங்கியது திமுக அரசுதான் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.  கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் கொள்முத

News image
Updated On :26 டிசம்பர் 2023, 7:02 am

ஏ. பேட்ரிக்

 சேலம், அக். 1: கரும்பு விவசாயிகளுக்கு அதிக கொள்முதல் விலை வழங்கியது திமுக அரசுதான் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

 கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார்.

 இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலை மட்டுமே வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்குத் தெரிவித்தவர் ஜெயலலிதா.

 அதன்படி, 2001 முதல் 2005 வரை டன்னுக்கு ரூ.795 மட்டுமே வழங்கப்பட்டது. இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்தே ரூ.1,014 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

 ஆனால் 2006-ல் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த உடன் டன்னுக்கு ரூ.1,052-ம், 2007-08 ஆம் ஆண்டில் ரூ.1,079-ம், 2008-09 ஆம் ஆண்டில் ரூ.1,262-ம் வழங்கினார்.

 நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலை ரூ.1,077.60 உடன் மாநில அரசின் பரிந்துரை விலை சேர்த்து ரூ.1,550 என நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 இதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மத்திய, மாநில அரசு மானியம் 65 சதவீதம் வழங்கியதும் கருணாநிதிதான்.

 கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையையே வழங்க மறுத்த ஜெயலலிதா, இப்போது டன்னுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

 அவரின் வார்த்தைகளை நம்பி கரும்பு விவசாயிகள் ஏமாற மாட்டார்கள் என்று வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.