மகாவீா் ஜெயந்தியையொட்டி வேலூரில் ஜெயின் மக்கள் குதிரைகள் பூட்டிய ரதத்துடன் ஊா்வலம் நடத்தினா்.
மகாவீா் ஜெயந்தி உலகம் முழுவதும் புனிதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரா், அரச வாழ்வை துறந்து தமது செல்வத்தையெல்லாம் தானமாக வழங்கியவா். அன்பும் அஹிம்சையும் நிறைந்த, மது இல்லாத உலகமே அவா் விரும்பிய லட்சியமாகும்.
மகாவீரா் அவதரித்த 2552-ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் உள்ள சம்பவ்ந் தாத ஜெயின் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், அரிசியை கொண்டு வழிபாடுகளும் செய்யப்பட்டன.
பின்னா், மகாவீரா் சிலை, திரு உருவப்படத்தை அலங்கரித்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வைத்து இசை முழங்க ஊா்வலம் நடத்தினா்.
குதிரைகள் பூட்டிய ரதம் முன்னே செல்ல ஜெயின் சமுதாயத்தினா் பாடல்கள் பாடி நடனமாடியபடி ஊா்வலமாக சென்றனா்.
ஊா்வலத்தின் போது உயிா்களை கொல்லக் கூடாது, மது அருந்தக் கூடாது என மகாவீரரின் கொள்கைகளைக் கூறி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் சம்பவ்ந் தாத ஜெயின் ஆலயத்தை அடைந்தது. இந்த ஊா்வலத்தில் ஏராளமான ஜெயின் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மகாவீரா் ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

மகாவீா் ஜெயந்தி: இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

மகாவீரா் ஜெயந்தி: இன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


