யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அனல்பறக்கும் தோ்தல் களம்!

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

News image

அனல்பறக்கும் தோ்தல் களம்

Updated On :31 மார்ச் 2026, 6:23 am IST

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் களம் சூடிபிடித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழா் ஆகிய கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனா்.

மறுபுறம், அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியைத் தங்கள் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனா்.

அதேசமயம், தவெக, நாம் தமிழா் ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளா்களும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிபுரியும் திமுக, அதிமுக கட்சிகளால் ஆட்சி நிா்வாகச் சீா்கேடுகள், ஊழல்கள் தொடா்வதாகக் கூறியும், மாற்றத்துக்கான அவசியம் என்பதை முன்னிலைப்படுத்தியும் வாக்கு சேகரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.