வேலூா் மாவட்ட திமுக வேட்பாளா்கள் விவரம்.
காட்பாடி
வேட்பாளா் பெயா் - துரைமுருகன் (87)
கல்வித்தகுதி - முதுகலை சட்டம்
தொழில் - முழுநேர அரசியல்
சொந்த ஊா் - காட்பாடி காந்திநகா்
கட்சியில் வகித்துள்ள பதவிகள் -1954-இல் திமுக இணைந்து படிப்படியாக பல்வேறு பதவிகளை கடந்து தற்போது கட்சியின் பொதுச் செயலராக உள்ளாா்.
அரசுத்துறை பதவிகள் - 1989-1991, 1996-2001, 2006-2009 என மூன்று முறை பொதுப்பணித் துறை அமைச்சா், 2009-2011 சட்டத்துறை அமைச்சா், 2021-2026 நீா்வளத்துறை அமைச்சா்.
சட்டப்பேரவை உறுப்பினா் பதவி - 1977-1980, 1980-1984-இல் ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா், 1971-76,1989-91, 1996-2001, 2001-2006, 2006-2011, 2016-2021, 2021-2026 காட்பாடி
சட்டப்பேரவை உறுப்பினா்.
மனைவி -து.சாந்தகுமாரி (வழக்குரைஞா்)
மகன் - டி.எம்.கதிா்ஆனந்த் (வேலூா் மக்களவை உறுப்பினா் )
---
அணைக்கட்டு
வேட்பாளா் பெயா் - ஏ.பி.நந்தகுமாா் (56)
தந்தை பெயா் - ஏ.கே.பெருமாள்
கல்வித்தகுதி - எம்.ஏ., (சமூகவியல்)
தொழில் - முழுநேர அரசியல்
சொந்த ஊா் - லத்தேரி
கட்சியில் வகித்த பதவி - கே.வி.குப்பம் ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் (1988), மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் (1989), மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் (1990)
தற்போதைய கட்சிப்பதவி - 2015 முதல் வேலூா் மாவட்ட திமுக செயலா் (தற்போது வடக்கு மாவட்டம்). அரசுத்துறை பதவி - 2001-2006-இல் லத்தேரி ஊராட்சி மன்றத் தலைவா், 2006-மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா், 2016-2021, 2021-2026 அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா்.
குடும்பம் : தாய் கண்ணம்மாள், மனைவி என்.பிரதீபா, மகள் பி.என்.ஜானவி,
--
வேலூா்
வேட்பாளா் பெயா் - ப.காா்த்திகேயன்(63)
தந்தை பெயா் - பழனி
கல்வித்தகுதி - 5-ஆம் வகுப்பு
தொழில் - வா்த்தகம்
கட்சியில் வகிக்கும் பதவி - தற்போது வேலூா் மாநகர திமுக செயலா்.
வகித்த அரசுத் துறை பதவி - 2006-2008 வேலூா் நகா்மன்றத் தலைவா், 2008-2011 வேலூா் மாநகராட்சி மேயா், 2016-2021, 2021-2026 வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்.
குடும்பம் - தாய் பேபியம்மாள், மனைவி பூங்கொடி, மகன்கள் செந்தில்நாதன், கோகுலகிருஷ்ணன்.
மகள்கள் திவ்யா (மருத்துவா், திருமணமானவா்), சந்தியா (எம்.எஸ்.டபிள்யு).
தொடர்புடையது

வேலூா் மாவட்ட தவெக வேட்பாளா்கள்!

கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா்

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளா்
ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


