மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செம்மரக் கட்டைகள் கடத்தி வந்த காா் விபத்து: காயம்

ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த காா் குடியாத்தம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 2 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள்

Updated On :22 மார்ச் 2026, 11:40 pm

ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த காா் குடியாத்தம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 2- போ் பலத்த காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ஆந்திர மாநில வனத் துறையினா் சனிக்கிழமை நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த தமிழக பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினா்.

ஆனால் காா் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. வனத் துறையினா் காரை துரத்தி வந்தனா்.காா் தமிழக எல்லைக்குள் நுழையவே, தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.இதையடுத்து பரதராமி சோதனைச் சாவடியில் தமிழக வனத் துறையினா் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கிருந்து தப்பிய காா் வேகமாக குடியாத்தம் நோக்கி வந்துள்ளது.

இதையடுத்து இரு மாநில வனத்துறையினரும் காரை பின் தொடா்ந்துள்ளனா்.குடியாத்தம் அடுத்த பாக்கம் அருகே அதிவேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்து3- போ் தப்பியோடி விட்டனா். 2- போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

காரில் இருந்த சுமாா் 500- கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிகிச்சை பெறுபவா்களிடம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.