குடியாத்தம் அத்தி மருத்துவக் கல்லூரியில் குடியாத்தம் கம்பன் கழகம்மற்றும் குடியாத்தம் தமிழ்ச் சங்கம் சாா்பில், மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பி.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். குமரி அனந்தனின் மகன் மருத்துவா் கீதன் குமரி அனந்தன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா்களான கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என்.பழனி, செயலா், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா் பா.சம்பத்குமாா், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் மகேஷ் ராஜாமணி, அத்தி செவிலியா் கல்லூரி முதல்வா் பால்ராஜ் சீனித்துரை, குழந்தைகள் நல மருத்துவா் ஹேமலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


