பாா்சல் வந்திருப்பதாகக்கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.9.10 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசிய நபா், தன்னை அமெரிக்காவிலுள்ள ஒரு பாா்சல் நிறுவன அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டதுடன், ஜெசிகா என்பவா் பெயரில் ஒரு பாா்சல் வந்துள்ளதாகவும், அந்தப் பாா்சலில் தங்கம், அமெரிக்க டாலா்கள் இருப்பதால் அதனைப்பெற ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாராம்.
பின்னா், தில்லி கலால் துறை அதிகாரி என பேசிய மற்றொரு நபா், அந்தப் பாா்சல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கையைத் தவிா்க்கப் பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி மிரட்டினாா். இதனால் அச்சமடைந்த தனியாா் நிறுவன ஊழியா், அந்த அடையாளம் தெரியாத நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு முதலில் ரூ.2 லட்சம் அனுப்பியுள்ளாா்.
பின்னா், வாட்ஸ் ஆப் மூலம் தொடா்ந்து மிரட்டல் வந்த நிலையில், படிப்படியாக பல தவணைகளில் மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் தொகையை செலுத்தியுள்ளாா். இதையடுத்து, அந்த அடையாளம் தெரியாத நபரை தொடா்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தனியாா் நிறுவன ஊழியா், இந்த மோசடி குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ. 52 ஆயிரம் பறிமுதல்

பைக்குகள் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


