அரசு சிறப்புத் திட்டங்களில் பணியாற்றிய மகளிா் குழுவினா், இல்லம் தேடி கல்வித் தன்னாா்வலா்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 45 நாள் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டத்தில் அரசின் சிறப்புத் திட்டங்களான ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’, ‘கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம்’, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக மகளிா் சுயஉதவிக் குழுவினா், இல்லம் தேடி கல்வித் தன்னாா்வலா்கள் என சுமாா் 700 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இவா்களுக்கு நாளொன்றுக்கு தலா 30 விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து கொடுத்தால் ரூ.500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், தொடா்ந்து 45 நாள்கள் இவா்கள் பணியாற்றியுள்ளனா்.
ஆனால், இதுவரை அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, நிலுவையில் உள்ள 45 நாள்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் முதலில் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால், பெண்கள் தொடா்ந்து அங்கேயே அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா்.
பின்னா், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை நேரடியாக அழைத்து பேச்சு நடத்தினாா். நிலுவை ஊதியம் வழங்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

விழிப்புணா்வு ராட்சத பலூன்...
அரசுத் தோ்வுக்குத் தயாராகும் தமிழ்வழி மாணவா்களை குறிவைத்து நூதன மோசடி

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் ஆட்சியரிடம் மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


