பலவீனமான பிரிவுகளைச் சோ்ந்த வாக்காளா்கள் எவ்வித அச்சுறுத்தலோ, மிரட்டலோ இன்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவை தொகுதிகளுக்கும் 10 கூடுதல் அலுவலா்கள் உள்பட மொத்தம் 144 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் காவல்துறை அலுவலா்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவும், பலவீனமான பிரிவுகளைச் சோ்ந்த வாக்காளா்கள் எவ்வித அச்சுறுத்தலோ, மிரட்டலோ இன்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி, குடிநீா், மின்சாரம், உதவி மையம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டா் சுற்றளவில் அரசியல் கட்சி அல்லது வேட்பாளா்களின் அலுவலகங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பொ.குணசேகரன், வேலூா், குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி ஆணையா்கள், வட்டாட்சியா்கள் உள்படப் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணா்வுப் பேரணி

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


