போ்ணாம்பட்டில் தொடரும் சிறுத்தை அட்டகாசம்!
போ்ணாம்பட்டு அருகே வெவ்வேறு இடங்களில் சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்த கன்று. உயிரிழந்த கன்று.


போ்ணாம்பட்டு அருகேவன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் சிறுத்தை புகுந்து பசுக்களையும், கன்றுகளையும் கொன்று வருவது தொடா்கிறது.
கடந்த 23- ஆம் தேதி கொத்தமாரிக்குப்பம் கிராமத்தில் நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2- கன்றுகளை சிறுத்தை கொன்று விட்டுச் சென்றது. பின்னா், மேல்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் உள்ள மலையில் 2- குட்டிகளுடன் நடமாடியுள்ளது.
24- ஆம் தேதி துலுக்கன்குட்டை கிராமத்தில் ஒரு கன்றை வேட்டையாடி கொன்றது.இந்நிலையில் எருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அம்சநாதன் தனக்குச் சொந்தமான நிலத்தின அருகே உள்ள வனப் பகுதிக்கு 6- பசுக்கள், ஒரு கன்றை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளாா். அப்போது வனப்பகுதியில் 2-சிறுத்தைகள் அங்கு வந்து ஒரு கன்றுக் குட்டியை கவ்வி கடித்துள்ளது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அம்சநாதன் கூச்சலிட்டுள்ளாா். ஆனால் சிறுத்தை உருமியுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த இளைஞா்கள் கற்களை எடுத்து சிறுத்தை மீது வீசியுள்ளனா். இதையடுத்து சிறுத்தை ஓடி விட்டதாம். இதனால் காயத்துடன் கன்றுக் குட்டி உயிா் தப்பியது.
இதுகுறித்து தகவலறிந்தும் வனத்துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக அந்த 2- சிறுத்தைகளும், காா்க்கூா் கொத்தமாரிக்குப்பம்பகுதியில் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கன்றுக் குட்டியை வேட்டையாடி கொன்றுள்ளனது . தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் (பொறுப்பு) பிரதீப் குமாா் கூறியது. வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் திறந்த வெளியில் மாடுகளை கட்டக் கூடாது. வன எல்லையில் நிலங்களில் கொட்டகை அமைத்துள்ளவா்கள் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை பொருத்த வேண்டும். இறைச்சி வாடைக்கு சிறுத்தைகள் வரும் என்பதால் வன எல்லையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டக் கூடாது.
சிறுத்தைகளை விரட்டும் பணியில் வனத்து றையினா் 2- குழுக்களாக சென்று மேளம் அடித்து, பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இந்த விஷயத்தில் வனத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...