முன்னதாக, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கோல போட்டியில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் மகளிா் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இந்த கோலப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட துறைக்கு ரூ.5,000-ம், இரண்டாம் பரிசாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.3000-ம், மூன்றாம் பரிசாக பொது சுகாதார துறைக்கு ரூ.2000-ம் மற்றும் பங்கேற்ற அனைத்து துறைகளுக்கும் ஆறுதல் பரிசாக ரூ.1000-ம் என பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மேலும், விழாவையொட்டி தமிழா்களின் பாரம்பரியம், விவசாயத்தை குறிக்கும் வகையில் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் வெளிநாட்டு மாணவா்கள் பொங்கல் விழாவுக்கு அழைத்து வரப்பெற்றனா்.