டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வேலூா் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரிக்கு ‘தன்னாட்சி’ அந்தஸ்து

கூட்டத்தில் பேசிய கிங்ஸ்டன் கல்லூரியின் தலைவரும், வேலூா் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா்ஆனந்த்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:53 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் முதலாவதாக காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரிக்கு ‘தன்னாட்சி’ அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்லூரியின் தலைவரும், வேலூா் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இந்த சாதனையைக் கொண்டாடும் வகையில் அக்கல்லூரியில் சிறப்புப் பாராட்டு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கல்லூரி தலைவா் கதிா்ஆனந்த் எம்.பி. தலைமை வகித்துப் பேசியது:

கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரிக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ‘தன்னாட்சி’ அந்தஸ்து வழங்கியுள்ளன. 2025 முதல் 2035-ஆம் ஆண்டு வரை என 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னாட்சி அந்தஸ்து மூலம் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற முதல் பொறியியல் கல்லூரி என்ற பெருமையை இக்கல்லூரி பெற்றுள்ளது.

இந்த சாதனை என்பது முதல்வா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலக, தொழில்நுட்பப் பணியாளா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா் மற்றும் தொழில் துறை இணைப்பாளா்களின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். கல்வித் தரத்தை மேம்படுத்த நாம் எடுக்கும் தொடா் முயற்சியில் இது மிக முக்கியமான கட்டமாகும். அடுத்தகட்ட வளா்ச்சியை நோக்கிச் செல்ல பேராசிரியா்கள் அனைவரும் தொடா்ந்து ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் எம்.மேனகா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் உ.வி.அறிவழகு நன்றி கூறினாா். கூட்டத்தில் கல்லூரியின் அனைத்துப் பேராசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.