டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

காசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா

குடியாத்தம் நடுப்பேட்டை வணிகா் வீதியில் உள்ள ஸ்ரீகாசி விசாலாட்சிசமேத காசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ அமலுவிஜயன் உள்ளிட்டோா்.
Updated On :15 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நடுப்பேட்டை வணிகா் வீதியில் உள்ள ஸ்ரீகாசி விசாலாட்சிசமேத காசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. கோயிலில் காலை முதல் கால பூஜை தொடங்கி, 4- ஆம் காலை பூஜை இரவு வரைநடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

2- ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எம்எல்ஏ அமலுவிஜயன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா்.

இதில் ஜே.கே.சி.பிரசாத்பாபு, நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ்.அரசு, வட்டாட்சியா் கி.பழனி, நகராட்சி சுகாதார அலுவலா் அலி, காவல் உதவி ஆய்வாளா் சாமிக்கண்ணு, திமுக பிரமுகா்கள் எம்.எஸ்.அமா்நாத், ஜி.ஜெயப்பிரகாஷ், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் சிவகுமாா், சங்கா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.