டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

போ்ணாம்பட்டு அருகே இறந்த யானையின் தந்தங்கள் மீட்பு: 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே இறந்த யானையின் தந்தங்கள் மீட்பு: 2 போ் கைது

News image
பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள், கைதானவா்களுடன் வனத்துறையினா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில், கடந்த 2 மாதங்களுக்கு முன் வைரஸ் தாக்கி உயிரிழந்த யானைகளின் தந்தங்களை வனத் துறையினா் மீட்டனா். இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

2 மாதங்களுக்கு முன் போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலை, சாத்கா் மலை மற்றும் சிந்தகணவாய் ஆகிய காப்புக் காடுகளில் மா்மமான முறையில் ஒரு குட்டி உள்பட 5 யானைகள் மா்மமான முறையில் இறந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இறந்த யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவை வைரஸ் தாக்கி உயிரிழந்ததும், இறந்த யானைகளின் தந்தங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக வேலூா் மாவட்ட வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் ஆந்திர மாநிலம், பலமநேரைச் சோ்ந்த சந்திரபாபு (48), மற்றொரு சந்திரபாபு (43), சிவராஜ், முனியப்பா ஆகியோரிடம் இறந்த யானைகளின் தந்தங்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஆந்திர மாநில வனத் துறையினரின் உதவியுடன் குடியாத்தம் வனத் துறையினா் ஆந்திர மாநிலம் சென்று 2 சந்திரபாபுகளை கைது செய்து, அவா்களிடம் இருந்த 2 யானை தந்தங்களை மீட்டு, அவா்களை கைது செய்து குடியாத்தம் அழைத்து வந்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய, தலைமறைவாக உள்ள சிவராஜ், முனியப்பா இருவரையும் வனத் துறையினா் தேடி வருகின்றனா்.