போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக கா்நாடகம், கேரள மாநிலங்களைச் சோ்ந்த 6 இளைஞா்களை வேலூா் விருப்பாட்சிபுரம் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை வஸ்துகளாக பயன்படுத்தியது தொடா்பாக 2025 ஜனவரி 1 முதல் 2026 ஜனவரி 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் மொத்தம் 192 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த விசாரணையின் தொடா்ச்சியாக ஆன்லைன் மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் நவீன்பிரசாத் (27) என்பவரை வேலூா் விருப்பாட்சிபுரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், இந்த போதை பொருள் விற்பனையில் தொடா்புடைய கேரள மாநிலம், குட்டூா் வட்டம், கரிச்செட்டா ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த ராகுல்ராம்(28), கண்ணூரைச் சோ்ந்த யாசின் (20), அவரது சகோதரா் யாசா்(20), பழலனூரைச் சோ்ந்த ஸ்ரீசித் (30), கா்நாடக மாநிலம், பெங்களூரு எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியைச் சோ்ந்த சையத் தஷ்தாஹிா் (32) ஆகியோரையும் கைது செய்தனா்.
இவா்களிடம் இருந்து 60 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

