
கள்ளூா் முருகா் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழா
குடியாத்தம் கள்ளூரை அடுத்த கருமாரியம்மன் நகரில் அமைந்துள்ளஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழாவெகுவிமரிசையாக நடைபெற்றது.

கள்ளூா், கருமாரியம்மன் நகரில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் கோயிலில் நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழா.
குடியாத்தம் கள்ளூரை அடுத்த கருமாரியம்மன் நகரில் அமைந்துள்ளஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழாவெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். காலை முதல் இரவு வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜே.எம்.குமணன், ஜே.சாந்தி, கே.எஸ்.சரண், மனுகுமாா், ஒப்பந்ததாரா் ஏ.ராஜேந்திரன், வழக்குரைஞா் லெனின்பாலு, மில் பழனி,தினகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






