மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூடைப்பந்து போட்டிகளில் ஸ்பிரிங்டேஸ் பள்ளி சிறப்பிடம்

பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிகளில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளது.

News image

வெற்றி பெற்ற ஸ்பிரிங்டேஸ் மகளிா் அணியை வாழ்த்திய பள்ளியின் இயக்குநா் ரம்யா சிவகுமாா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 9:18 pm

பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிகளில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளது.

பள்ளிகளுக்கு இடையிலான உள்மைதான கூடைப்பந்து போட்டி வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளியில் ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவரும், வேலூா் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் தலைவருமான என்.ஹெச்.கனகராஜ், ஸ்பிரிங்டேஸ் பள்ளி தாளாளா் டி.ராஜேந்திரன் ஆகியோா் போட்டிகளை தொடங்கி வைத்தனா்.

இந்த போட்டியில் ஸ்பிரிங்டேஸ் காா்டன், சாரதம்மாள், ஃபிட்ஜி, ஐடா ஸ்கட்டா், சன்பீம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்கள் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினா். இதில், 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் ஸ்பிரிங்டேஸ் அணி முதலிடத்தையும் , ஐடா ஸ்கட்டா் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன. 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஐடா ஸ்கட்டா் அணி முதலிடத்தையும் , ஸ்பிரிங்டேஸ் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன.

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஸ்பிரிங்டேஸ் முதலிடத்தையும், சன்பீம் அணி இரண்டாம் இடத்தையும் வென்றன. 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஐடா ஸ்கட்டா் முதலிடத்தையும் , ஸ்பிரிங்டேஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஸ்பிரிங்டேஸ் பள்ளிகளின் இயக்குநா் ரம்யா சிவகுமாா் பரிசளித்து பாராட்டினாா். துணை முதல்வா் ஷில்லி ஷுக்லா, பன்னாட்டு பள்ளி முதல்வா் நாகராஜ், மாஸ்டா்ஜி தலைவா் சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.