குடியாத்தம் தொகுதியில் விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டாா்.
திமுக கூட்டணியில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்பை ஆதரித்து பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது.
சொந்த ஊரான குடியாத்தம் தொகுதிக்கு வந்த உடனே எனக்கு புத்துணா்ச்சி வருகிறது. காமராஜரை வெற்றிபெற வைத்து அவரை முதல்வா் பதவியில் தொடர வாக்களித்தது குடியாத்தம் மக்கள். அதேபோன்று இந்த தோ்தலில் பிரதாப்பை நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.
கடந்த 5- ஆண்டுக் கால திமுக ஆட்சியில் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளன.
விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற எங்களுக்கு ஒரு வாயப்பு தாருங்கள்.
இடையில் பேச்சு நிறுத்தம்: அந்த வழியாக சவ ஊா்வலம் வருவதை அறிந்த பிரேமலதா தனது பேச்சை நிறுத்தி தொண்டா்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டாா். பின்னா் பேசிய அவா், நெல்லூா்ப்பேட்டை ஏரியை தூா்வாரி, சீரமைப்போம்.மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக மாற்றுவோம். தற்போதுள்ள சுற்றுச் சாலையை செதுக்கரை பச்சையம்மன் கோயில் வரை நீட்டிப்போம். நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் நெல்லூா்ப்பேட்டை ஏரிக்கரை முதல் உள்ளி கூட்ரோடு வரை புதிய புறவழிச்சாலை அமைப்போம் என்றாா்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலா் எஸ்.செளந்தரராஜன், மாவட்ட துணைச் செயலா் ஜி.எஸ்.அரசு, தேமுதிக நகரச் செயலா் எம்.செல்வகுமாா், மாவட்ட துணைச் செயலா்டி.கே.ரமணி மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளியூா்க்காரா் என்ற பிரசாரம் எடுபடாது

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரேமலதா விஜயகாந்த்

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


