குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா்ஜி.பரிதா புருஷோத்தமன் ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள வளத்தூா், கீழ்ப்பட்டி, குளிதிகை, சின்னதோட்டாளம்,வரதாபாளையம், சாந்தி நகா், கருணீகசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக ஒன்றியச் செயலா் டி.சிவா தலைமையில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீா் வசதி, சாலை, தெரு விளக்கு, கால்வாய் வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவைகளை நான் வெற்றிபெற்றால் செய்து தருவேன் என உறுதியளித்தாா்.
பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, ஊராட்சித் தலைவா் நிா்மலா சேட்டு, ஒன்றியக்குழு உறுப்பினா் பிரியா சத்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் தேமுதிக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



